World Chess Championship - வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
மெக்ஸிகோவில் நடைபெற்று முடிந்த உலக செஸ் சேம்பியன்ஷிப் போட்டியில், 14 சுற்றுகளில் 9 புள்ளிகள் பெற்று, ஆனந்த் வெற்றி வாகை சூடினார். உலகின் டாப் 8 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட, மிக மிகக் கடினமான ஒரு களத்தில் வெற்றி பெற திறமை மட்டும் போதாது! சூழல் தரும் அழுத்தத்தை சிறப்பாக எதிர்கொண்டு, நிதானத்தையும் கவனத்தையும் (Patience and Concentration) தொடர்ந்து பல நாட்கள் தக்க வைத்துக் கொண்டு, ஆனந்த் இந்தப் பட்டத்தை வென்று உலக சேம்பியன் ஆகியிருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
இந்தியாவில் செஸ் நல்ல பிரபலம் அடைந்திருப்பதற்கும், தற்சமயம் பல இளம் இந்திய ஆட்டக்காரர்கள் உலக அலவில் ஆடவல்ல திறமையை பெற்றிருப்பதற்கும் விஸ்வநாதன் ஆனந்த் ஒரு சிறந்த முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் T-20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகப் பட்டத்தை வென்று விரைவில் தாயகம் திரும்பவுள்ள ஆனந்துக்கு எந்த விதமான வரவேற்பு அளிக்கப்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! இதை நான் குறிப்பிடவில்லை, ஆனந்தே ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்!
அவருக்கு (உரிய) சிறப்பான வரவேற்பும், கௌரவமும் அளிக்கப்பட வேண்டும் என்பது என் போன்ற செஸ் ரசிகர்களின் அவா! Congratulations Anand, for this Superlative Achievement and bringing Laurels to Our Country!
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 366 ***
6 மறுமொழிகள்:
test comment !
வேறெந்த விளையாட்டிலும் தோற்றுப்போனால் காரணமாய் பல பலிகடாக்கள் இருக்கும். இங்கே, சதுரங்கத்தில், முழுபொறுப்பும் விளையாட்டு வீரனைச் சார்ந்ததே. ஆகவே அவரது இந்த வெற்றி வேறு எந்த விளையாட்டு சாதனையுடனும் ஒப்பிட முடியாததுதான். அவருக்கு மிகச்சிறப்பானதொரு வரவேற்பைக் கொடுக்க தமிழகமும் இந்தியாவும் கடமைப் பட்டுள்ளன.
அன்புடன்
கபீரன்பன்
ஹாக்கிக்காவது கொஞ்ச பேர் போராட இருக்காங்க...
செஸ்க்கு ஆனந்த மட்டும் தான் குரல் எழுப்பவேண்டும் ஆனால் ஆனந்த் அதெல்லாம் செய்யமாட்டார்.
அவரால் நாட்டுக்கு பெருமை எனபதை இதன் மூலம் தெரியப்படுத்தியதற்கு உங்களுக்கு மிக்க நன்றி.
ஆனந்த விஷ்வநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அனானி, வடுவூர் குமார்,
விஸ்வநாதன் ஆனந்த் இதனால் நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை!
பெரிய வரவேற்பையெல்லாம் அவர் எதிர்பார்ப்பதில்லை.
ஆனந்தின் பேட்டியை படிக்கும் போது பரிசுத்தொகையை அவர் எதிர் பார்ப்பதாக தெரியவில்லை. வரவேற்பை தான் எதிர் பார்க்கின்றார்.
செஸ் என்பது கிரிக்கெட் போல் ஒரு mass கேம் கிடையாது. எத்தனை பேர் உட்கார்ந்து பார்ப்பார்கள் என்பது தெரியாது. ஆனால் 99.99% பேர் ரிசல்ட் தெரிந்து கொள்வதோடு சரி. செஸ் என்பது ஒரு ஆரவாரத்தோடு பார்க்கின்ற விளையாட்டும் கிடையாது.
ஆகவே மிகசிறப்பாக வரவேற்பு கொடுத்தாலும் , எத்தனை பேர் வழி நெடுகிலும் இருந்து ஆனந்த ஆரவாரம் செய்வார்கள் என்று தெரியாது.
பாலா..அடடா ஆனந்தைப் பாராட்டி தமிழ்ப் பதிவுகளில் யாரும் பெரிசா எழுதவில்லையே என்று ஆதங்கப் பட்டுக் கொண்டிருக்கையில் உங்கள் பதிவு ஆனந்தம் தருகிறது..
20 நாடுகளில் மட்டும் விளையாடப் படும் கிரிக்கெட்டில் டி20 போட்டியில் வென்ற இந்திய அணிக்கு மும்பையில் மக்கள் திரள் பெரும் வரவேற்பு அளித்தது..
166 நாடுகளில் விளையாடப் படும் செஸ்ஸில் உலகின் அதி உன்னத பட்டத்தை வென்று தக்கவைத்திருக்கும் ஆனந்த் எவ்வளவு பெரிய சாதனையாளர்!
தமிழக அரசு 25-லட்சம் பரிசு அறிவித்துள்ளது - ஓகே. ஆனால் மக்கள் அளவில் ஆனந்திற்கு எவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும்?
Shouldn't the schools in TN go gaga over such a towering achievement? I dont think we saw anything to that effect. Is it because of the castiest Tamil mindset that does not feel like celebrating a Brhamin boy's victory?
Or is it the crass tastes and mean-minded sensibilities cultivated over time that extols only cheap politicians, "super stars" and the like.. and ignores a true achiever?
Anand is the pride of India. I am sure other states and center also take note of it and honor the legendary grandmaster in a manner befitting his achievement !
Post a Comment